கடைசிக் கட்டத்தில் நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை : வெற்றி குறித்து ரோகித்சர்மா.. 

rohit35

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி ‌வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது. இதனால் இந்தியா 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடியே தோற்றனர்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, கடைசி ஆட்டத்தில் பந்து வீச்சு நன்றாக அமையவில்லை" என்பதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது.

பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். ஆனால் கடந்த சில ஆட்டங்களாக அணியின் பந்து வீச்சுகள் சரியில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். கடந்த 5 அல்லது 6 ஆட்டங்களில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை. கடைசி ஆட்டத்தில் (டெத்ஓவர்) பந்து வீச்சு நன்றாக அமையவில்லை.

பந்து வீச்சாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க விரும்புகிறோம். டெத் ஓவர்களில் பந்து வீசுவது சவாலானதே. ஆனால் அதுதான் ஆட்டத்தை முடிவு செய்கிறது. இது கவலைக்குரியது இல்லை. ஆனால் நமது செயலை ஒன்றிணைக்க வேண்டும். இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

 

Share this story