செஸ் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலாக உள்ளோம் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

By 
chess11

செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந்தேதி முதல், ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. 

இந்த போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பயணம் மேற்கொள்ளும் இந்த ஜோதி 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

பின்னர், ஜூலை 28-ம் தேதி  தமிழகத்தை அடையும் இந்த ஜோதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்படுகிறது. 

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது : 

உலக செஸ் பேரவை முதன்முறையாகத் தொடங்கியுள்ள செஸ் ஒலிம்பியாட் சுடரின் தொடர் ஓட்டத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்துள்ள இவ்வேளையில், 

இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிகுந்த இத்தருணத்தின் பின்னணியில் இருப்பதில் சென்னை பெருமை கொள்கிறது. 

தொடர் ஓட்டத்தின் முடிவில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம்' என அவர் தெரிவித்துள்ளார்
*

Share this story