இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும், அதிரடி காட்டுவோம் : பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை

By 
stokes

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

3 டெஸ்டுகளிலும் 250 ரன்களுக்கு மேலான இலக்கை தடாலடியாக ரன்மழை பொழிந்து எட்டிப்பிடித்தது. 

அதிரடி காட்டுவோம் :

கொரோனா பிரச்சினையால், கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இதேபோல், அதிரடி காட்டுவோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார். 

இது குறித்து, ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில், 'உலகின் தலைச்சிறந்த அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. 

அடுத்து நாங்கள் மற்றொரு அணியை எதிர்கொண்டாலும் கூட அதே மனநிலையில் (ஆக்ரோஷமான ஆட்டம்) தான் விளையாடுவோம். அதில் மாற்றம் இருக்காது. 

நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டுகளில் நாங்கள் என்ன செய்தோமோ அதை இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும் தொடர்வதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார். 

வெள்ளிக்கிழமை :

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 

தற்போது, இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணியினர் தீவிரமாக உள்ளனர். 

கடந்த ஆண்டு மனஅழுத்தம் காரணமாக இந்த தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஒதுங்கி இருந்தது நினைவு கூரத்தக்கது.
*

Share this story