வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கொடுத்த சர்ப்ரைஸ் : ஓர் வைரல் பதிவு..
 

By 
vairal

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி  நடைபெற்றது. 

இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. 

முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார். இதனை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. 

டீம் இந்தியா டிரஸ்ஸிங் ரூமுக்கு யார் வந்தார் என்று பாருங்கள். ஜாம்பவான் லாரா!" என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. 

வீடியோவில் லாராவுடன் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிற வீரர்கள் அரட்டை அடிப்பதைக் காண முடிந்தது.
*

Share this story