உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன; அல்லாவை தேடி : சானியா மிர்சா விவாகரத்து உருக்கம்.?

sania

* டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் பிரான்சின் கரோலின் கார்சியா பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் கரோலின் கார்சியா 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். 29 வயதான கரோலின் கார்சியா டபிள்யூ.டி.ஏ. பட்டத்தை வென்ற இரண்டாவது பிரான்ஸ் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் 2005 ஆம் ஆண்டு அமேலி மௌர்செமோ (பிரான்ஸ்) இந்த பட்டத்தை வென்று இருந்தார்.

*  இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மலிக் இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.அவர்களுக்கு நான்கு வயது நிரம்பிய இஷான் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில், இந்த நட்சத்திர தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.சோயப் மலிக் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சானியா மிர்சாவை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

எனினும், அவர்களின் பிளவுக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. சோயப்புக்கும் சானியாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த ஜோடி சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சானியா மிர்சாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி..." என்று பதிவிட்டார்.
 

Share this story