கடைசி ஓவரை, உம்ரான் மாலிக்குக்கு வீச கொடுத்தது ஏன்? : ஹர்திக் பாண்ட்யா விளக்கம்

umran1

இந்தியா-அயர்லாந்து இடையிலான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 2 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 

வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கடைசி ஓவரை புதுமுக வீரரான உம்ரான் மாலிக்குக்கு கொடுத்தது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, அவர் கூறியதாவது :

இறுதி ஓவரின்போது உண்மையை சொல்ல வேண்டுமானால் எந்த கவலையும் படவில்லை. நெருக்கடியில் சிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். 

உம்ரான் மாலிக் மீது முழு நம்பிக்கை இருந்தது. அவருடைய பந்துவீச்சு வேகத்தை எதிர்கொள்வது எளிதல்ல. 

அயர்லாந்து வீரர்கள் சிறப்பாக ஆடி வந்தனர். ஆனாலும் உம்ரான் மாலிக் நேர்த்தியாக விளையாடினார். 

அவர் மீதுள்ள நம்பிக்கையால் கடைசி ஓவரை கொடுத்தேன். நெருக்கடியான இந்த நேரத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்' என்றார்.
*

Share this story