டென்னிஸ் ஆடுகளத்தில், சானியா மிர்சா கண் கலங்கியது ஏன்?

sania5

கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி பிரேசிலின் லூசா ஸ்டெபானி-ரபெல் மேட்டோஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி 6-7 (2-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

பிரேசில் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
 

Share this story