ஹர்திக் பாண்ட்யாவால், எத்தனை போட்டிகளுக்கு 4 ஓவர்களை வீசமுடியும்? : அசாருதீன் கேள்வி

By 
pandya

அனைவரையும் வியக்க செய்யும் வகையில், ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்துவீசி மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். 

புதிய அணியான குஜராத், ஐபிஎல் கோப்பையையும் வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில், 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பாண்ட்யாவின் பந்துவீச்சு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :

ஹர்திக் பாண்ட்யாவுக்கு பந்துவீசும் திறமை இருக்கிறது. இந்திய அணிக்கு பல போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். 

ஆனால், காயம் காரணமாக பல போட்டிகளில் அவரால் ஆடமுடியாமல் போனது. இப்போது காயத்திலிருந்து பாண்ட்யா திரும்பிவந்துள்ளார். 20 ஓவர் போட்டியில் 4 ஓவர்கள் வரை வீசுகிறார். 

ஆனால், ஹர்திக் பாண்ட்யாவின் உடற்தகுதி வைத்துப் பார்த்தால், அவரால் எத்தனை போட்டிகளுக்கு 4 ஓவர்களை வீச முடியும் என்பது தெரியாது. 

ஆல்ரவுண்டராக இருக்கும் பாண்ட்யா, நிச்சயமாக பந்துவீச வேண்டும் என்பது தான் விருப்பம். ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சு ஆட்டத்தையே மாற்றிவிட்டது. 

4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பாண்ட்யா சிறப்பாகப் பந்துவீசினார். பேட்டிங்கிலும் விரைவாக 34 ரன்கள் சேர்த்தார். அவர் சிறந்த வீரராக விளங்கி வருகிறார். 

தொடர்ந்து, அவர் அதை செய்யவேண்டும்' என்றார்.
*

Share this story