டென்னிஸ் ஆடும்போது, உள்ளே நுழைந்து போராட்டம் நடத்திய பெண் : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

1028

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், நார்வே வீரர் காஸ்பர் ரூட், குரோஷிய வீரர் மரின் சிலிச் மோதினர்.

இந்த போட்டி, நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பெண் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து தனது கழுத்தை, டென்னிஸ் வலையில் கட்டிக்கொண்டார். 

அவரது ஆடையில் ‘இன்னும் 1028 நாட்கள் மட்டுமே இருக்கிறது’ என ஐநா குறிப்பிட்ட காலநிலை குறித்த எச்சரிக்கை வாசகம் அதில் எழுதியிருந்தது.

இதையடுத்து, அவரை பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்து சென்றனர். 

இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, 'காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேதான் மைதானத்திற்குள் வந்ததாக' தெரிவித்தார். 

இது தொடர்பாக டென்னிஸ் ரசிக நெட்டிசன்கள், 'விளம்பரம் தேடுவதற்கு எத்தனையோ நல்ல வழிகள் இருக்கின்றன. அதில், இது அருவருப்பான வழி' என வறுத்து எடுத்து வருகின்றனர்.
*

Share this story