மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி : சவிதா புனியா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு..
 

hockey5

நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் ஜூலை 1 முதல் நடைபெறவுள்ள எப்ஐஎச் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

காயம் காரணமாக ராணி ராம்பால் இடம்பெறாததால், இந்திய அணிக்கு கோல் கீப்பர் சவிதா புனியா தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக டீப் கிரேஸ் எக்கா நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் சீனாவுடன் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. 

18 பேர் :

இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 3ம் தேதி இந்திய அணி தங்கள் முதல் போட்டியை விளையாடுகிறது. 18 பேர் கொண்ட இந்திய அணி வீராங்கனைகளின் பெயர் பட்டியல் பின்வருமாறு : 

கோல்கீப்பர்கள்; சவிதா புனியா (கேப்டன்), பிச்சு தேவி கரிபம்.

தடுப்பாட்டக்கார்கள் : 

டீப் கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா.

மிட்பீல்டர்கள் : 

நிஷா, சுசீலா சானு புக்ரம்பம், மோனிகா, நேஹா, ஜோதி, நவ்ஜோத் கவுர், சோனிகா, சலிமா டெடே 

முன்கள வீரர்கள்: 

வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்நீத் கவுர், ஷர்மிளா தேவி 

மாற்று வீரர்கள் : 

அக்சதா அபாசோ தெகலே, சங்கீதா குமாரி ஆகியோர் ஆவர்.
*

Share this story