மகளிர் டென்னிஸ் போட்டி : ஒரு முன்னாள் சாம்பியன், முதல் சுற்றிலேயே தோல்வி; ரசிகர்கள் அதிர்ச்சி
 

mugu

முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை பிரெஞ்ச் ஓபன் முகுருசா, தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, அந்நாட்டு தலைநகர் பாரீசில் தொடங்கியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்பின் முகுருசா, எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த கையா கனேபியை எதிர்கொண்டார்.

முதல் சுற்றை முகுருசா 6-2 என எளிதில் வென்றார். இதனால், சுதாரித்துக் கொண்ட கனேபி, இரண்டாவது சுற்றை 6-3 என கைப்பற்றினார்.

இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும், சிறப்பாக ஆடிய கனேபி 6-4 என்ற கணக்கில் வென்றார்.

இதன்மூலம் கனேபி 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
*

Share this story