மகளிர் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி : ஒரே பிரிவில் இந்தியா, பிரேசில்..
 

By 
football1

17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி, வருகிற அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்தியாவில் புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய இடங்களில் நடக்கிறது. 

இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் எந்தெந்த பிரிவில் இடம் பெறும் என்பது குலுக்கல் (டிரா) மூலம் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 

பலம் வாய்ந்த பிரேசில், மொராக்கோ, அமெரிக்கா ஆகிய அணிகள் அந்த பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளாகும். 

'பி' பிரிவில் ஜெர்மனி, நைஜீரியா, சிலி, நியூசிலாந்தும், 'சி' பிரிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், கொலம்பியா, மெக்சிகோ, சீனாவும், 'டி' பிரிவில் ஜப்பான், பிரான்ஸ் தான்சானியா, கனடாவும் அங்கம் வகிக்கின்றன. 

இந்திய அணியின் லீக் ஆட்டங்கள் புவனேஷ்வரில் நடக்கிறது. 

இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அக்டோபர் 11-ந் தேதி அமெரிக்காவையும், 14-ந் தேதி மொராக்கோவையும், 17-ந் தேதி பிரேசிலையும் சந்திக்கிறது.
*

Share this story