மகளிருக்கான ஹாக்கி போட்டி : வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய அணி..

hockey8

22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. 

இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், மகளிருக்கான ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில், இந்திய அணி - நியூசிலாந்து அணியை எதிர் கொண்டது. இதில் 1-1 என இரு அணிகளும் சமனிலை வகித்தன. 

இதையடுத்து, ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்று, வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தது. 

இதன்மூலம் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 41 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
*

Share this story