உலக வில் வித்தைப் போட்டி : தங்கம் வென்றது இந்தியா..

vil

துருக்கியில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில், இந்திய அணி தங்கம் வென்றது. 

அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் மற்றும் அமன் சைனி அடங்கிய இந்திய ஆண்கள் அணியினர் 232-231 என்ற கணக்கில் வென்று தங்கத்தை வென்றுள்ளனர்.

2017ல் நடந்த ஷாங்காய் போட்டிக்குப் பிறகு, இந்திய ஆண்கள் அணி பெற்ற முதல் உலகக் கோப்பை தங்கப் பதக்கம் இதுவாகும். 

வெண்கலப் பதக்கத்திற்கான பிளேஆஃப் போட்டியில் அபிஷேக் வர்மா மற்றும் முஸ்கன் கிரார் ஜோடி 156-157 என்ற கணக்கில் குரோஷிய ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதனால் இந்தியா இரண்டாவது பதக்க வாய்ப்பை இழந்தது.

Share this story