உலக தடகள சாம்பியன்ஷிப் : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை..

By 
annurani

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி, அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. 

இன்று, மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். 

இந்த போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அன்னு ராணி, சிறப்பாக விளையாடி, கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். 

அத்துடன் 8-வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். 

அதன் அடிப்படையில், அன்னு ராணி 8-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

இதன்மூலம் 2-வது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி தகுதி பெற்றார். 

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர் ஆகியோரை தொடர்ந்து, அன்னு ராணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
*

Share this story