உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : முதல் சுற்றில், முத்திரை பதித்தார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்..

laksya1

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்தியாவின் பதக்க வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியன் விட்டிங்ஹசை எதிர்கொண்டார்.

இதில் லக்‌ஷயா சென் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்

Share this story