உலகக்கோப்பை கால்பந்து போட்டி : கத்தாரை வீழ்த்தியது நெதர்லாந்து; ஆடுகள விவரம்..

By 
fifa3

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் நெதர்லாந்து, கத்தார் அணிகள் மோதின.

தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் பிரெங்கி டி ஜாங் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இறுதியில், நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வென்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடமும் பிடித்தது. கத்தார் அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

தொடர்ந்து... ஈகுவடார், செனகல் அணிகள் மோதின. தொடக்கம் முதல் செனகல் அணி சிறப்பாக ஆடியது . ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் செனகல் அணியின் இஸ்மைலா சர் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

இதனால் முதல் பாதியில் செனகல் 1-0 என முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் மொய்சஸ் கைசெடொ ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.

இதற்கு பதிலடியாக செனகல் அணியின் கலிடோ கவுலிபலி 70-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியில், செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது.

அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது. இந்த தோல்வியின் மூலம் ஈகுவடார் அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
*

Share this story