உலகக்கோப்பை கால்பந்து போட்டி : போலந்தை வீழ்த்தி, பிரான்ஸ் முன்னேற்றம்; அதிரடி விவரம்..

By 
france

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ், போலந்து அணிகள் மோதின. தொடக்கம் முதல் பிரான்ஸ் அணி சிறப்பாக ஆடியது.

ஆட்டத்தின் 44 -வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் ஒலிவியர் கிரவுட் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 74-வது நிமிடத்திலும், 91வது நிமிடத்திலும் பிரான்சின் கைலியன் மபாபே தலா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் கடைசி கட்டமான 99-வது நிமிடத்தில் போலந்தின் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

Share this story