உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : சென்னை மாணவர் தங்கம் வென்றார்..

spo2

*  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

*  உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில், ஜூனியர் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் ரவிசங்கர் ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ், திவ்யனாஷ் சிங் பன்வார், விதித் ஜெயின் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதி சுற்றில் 17-11 என்ற புள்ளி கணக்கில் சீனாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த தமிழக வீரரான ரவிசங்கர் ஸ்ரீ கார்த்திக் சபரிராஜ் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் முதலாம் ஆண்டு (பி.காம்) படித்து வருகிறார்.

 * திருவண்ணாமலையில் நடைபெற்ற 36-வது மாநில இளையோர் தடகள போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை மாவட்ட தடகள சங்கத்தினர் கைப்பற்றினர். அவர்களுக்கு கோப்பையை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.

 

Share this story