மல்யுத்தப்போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா..

puniya

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகிறது.

இதுவரை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றிருந்தது. 

இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 

ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில், இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இதன்மூலம், இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 21-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.  
*

Share this story