'டோனி போன்ற வீரர், நூற்றாண்டுக்கு ஒரு முறைதான் கிடைப்பார்கள்' : சொன்னது யார் தெரியுமா?

csk890

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளுக்கும் ஒன்று முதல் இரு போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இதுவரை எந்த அணியும் உறுதி செய்யவில்லை.

இதனால் ஒவ்வொரு போட்டி மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. எந்த சீசனில் நடக்காத வகையில் இந்த சீசனின் சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. சென்னை அணி வெளிமாநில மைதானங்களில் விளையாடினால் சென்னை அணியின் ரசிகர்கள் மைதானங்கள் முழுக்க சூழ்ந்தனர்.

அதுமட்டுமல்லாமல் எதிரணி ரசிகர்களும் டோனியை பார்க்கப்பதற்காகவே மைதானங்களுக்கு வந்தனர். இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணி களமிறங்கியது.

இந்தப் போட்டியில் சென்னை அணி கேகேஆர் அணியிடம் தோல்வியடைந்தது. சென்னையில் கடைசி லீக் போட்டி என்பதால் டோனியும், சென்னை அணி வீரர்களும் மைதானம் முழுக்க வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Share this story