ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிறார், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்..

Actor Madhavan's son Vedant prepares for Olympics


நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரராக உள்ளார். அவர் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் பங்கேற்று 7 பதக்கங்களை வென்றார். 

இதை தொடர்ந்து அவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். 

துபாயில் குடியேறினார் :

இந்நிலையில், அவர் நீச்சல் பயிற்சி பெறுவதற்காக மாதவன், தன் மனைவி சரிதாவுடன் சென்று துபாயில் குடிபெயர்ந்துள்ளார். இது குறித்து நடிகர் மாதவன் கூறியதாவது :

வேதாந்த், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார். அவர் பயிற்சி பெறுவதற்கு பெரிய நீச்சல் குளங்கள் தேவை. 

ஆனால், மும்பையில் உள்ள நீச்சல் குளங்கள் அனைத்தும் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளன. 

அதனால், அவர் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக நானும், என் மனைவியும் துபாயில் குடியேறியுள்ளோம். 

பெருமை :

எங்கள் மகன், உலகம் முழுவதும் நடைபெறும் பல நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். 

அவரை ஒரு நடிகராக்குவதில் எனக்கும், என் மனைவிக்கும் விருப்பமில்லை' என்றார்.
*

Share this story