கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில், முதலிடம் யார் தெரியுமா?

By 
goo4

இந்திய  கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இவர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட  இந்தியர்களில் முதலிடத்தில் உள்ளார்.

தற்போது உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடந்து வரும் நிலையில்,  கடந்த போட்டியில் விராட் கோலி 98 ரன்கள் அடித்தபோது கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார். அத்துடன் 13 ஆயிரம் ரன்களை கடந்த 5 வது வீரரானார்.

சச்சின் 321 இன்னிங்ஸில் படைத்த சாதனையை கோலி 267 இன்னிங்ஸில் படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 47சதங்கள் அடித்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் 77 சதங்கள் அடித்து சச்சினுக்கு (100)அடுத்த இடத்தில்  உள்ள கோலி ஐசிசி தொடர்களில் 3 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் கூகுள் -ல் அதிகம் தேடப்பட்ட இந்தியர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். மேலும், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் டாப் 10 இடங்களை பிடித்துள்ளனர். அதில், சுப்மன் கில் 2 வது இடத்திலும், கோலி 6வது இடத்திலும், ரோஹித் 8வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Share this story