அஞ்சு பாபிக்கு, 'இந்த ஆண்டின் சிறந்த பெண்' விருது : உலக தடகள அமைப்பு அறிவிப்பு

Anju Bobby's Best Woman of the Year 'Award World Athletics Association Announcement

உலக தடகள அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த பெண் விருது இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தை சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ் 2003 ஆம் ஆண்டு பாரீசில் நடந்த உலக தடகளப் போட்டியில், 6.7 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றவர்.

2016 ஆம் ஆண்டில் அவர் இளம் பெண்களுக்கான பயிற்சி அகாடமியை தொடங்கினார். 

இளம் விளையாட்டு வீராங்கனைகளை கண்டறிந்து, அவர்களின் திறமையை வளர்த்ததற்காகவும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தடகள சம்மேளனத்தின் மூத்த துணைத் தலைவராக, பாலின சமத்துவத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பாபி ஜார்ஜ், பள்ளி மாணவிகளுக்கு எதிர்கால தலைமைப் பதவிகளுக்கு வழிகாட்டி வருகிறார்.

‘தனது முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு நன்றி’ என டுவிட்டரில் அஞ்சு பாபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.  
*

Share this story