விதிமீறலில் ஈடுபட்ட வீரர்கள் வேண்டுகோள் : கிரிக்கெட் வாரியம் ஏற்பு

Appeal of players involved in the offense Cricket Board approval

வீரர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக விலக்கப்படுவதாக அறிவித்தது.

இலங்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 

அப்போது, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குசல் மென்டிஸ், தனுஷ்கா குணதிலகா, நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் கொரோனா தடுப்பு வளைய (பயோ பபுள்) விதிமுறைகளை மீறியதாக, ஒரு ஆண்டு தடைவிதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. 

5 மாதங்கள் ஒதுங்கியிருந்த நிலையில், 3 வீரர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர். 

இந்நிலையில், அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக விலக்கப்படுவதாக அறிவித்தது. 

இதனால், இனி அவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியும்.
*

Share this story