2-வது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியனான அரினா சபலெங்கா..

By 
safa

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரசிய வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 7ஆம் தேதி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்கியது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி இன்று நடந்தது. இந்த அரையிறுதிப் போட்டியில் பெலாரசிய வீராங்கனை அரினா சபலென்கா மற்றும் அமெரிக்காவின் கோகோ காஃபுடன் மோதினர்.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த அரினா சபலென்கா 7-6 (7-2) மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் கோகோ காஃபை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதே போன்று நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவ், சீன வீராங்கனையான கின்வென் ஜெங்கை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதையடுத்து இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், அரினா சபலென்கா மற்றும் கின்வென் ஜெங் மோதினர். இதில், தொடக்க முதலே சிறப்பாக விளையாடிய அரினா சபலென்கா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலமாக அடுத்தடுத்த பட்டத்தை வென்ற 2ஆவது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் விக்டோரியா அசரென்கா ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா தான் விளையாடிய போட்டிகளில் ஒரு ஷெட்டைக் கூட கைவிடவில்லை. இதன் மூலமாக மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒரு ஷெட்டை கூட இழக்காத 5ஆவது வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, டேவர்ன்போர்ட் (2000), ஷரபோவா (2008), செரீனா வில்லியம்ஸ் (2017) மற்றும் பார்டி (2022) ஆகியோர் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒரு ஷெட்டை கூட இழக்காமல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அடுத்தடுத்த சீசன்களில் டைட்டில் வென்ற 3ஆவது வீராங்கனை என்ற சாதனையை சபலென்கா படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் (2015-2016) மற்றும் ரோலண்ட் கரோஸில் (2022-2023) இகா ​​ஸ்வியாடெக் ஆகியோர் மகளிர் ஒற்றையர் பிரிவில் டைட்டில் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story