5 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்: இந்திய அணி அபாரம்..

By 
ars1

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 116 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டி20, ஒருநாள் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டி மழையால் ரத்துசெய்யப்பட மீத 2 போட்டிகளில் இரு அணியும் 1-1 என்ற நிலையில் போட்டி ட்ராவில் முடிந்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் அர்ஷ்தீப் சிங்கின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க அணி திண்டாடியது.

இரண்டாவது ஓவரிலேயே ஹெண்ட்ரிக்ஸ், டூசன் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்து வீழ்த்தினார். அடுத்து இந்திய பவுலர் ஆவேஸ் கானும் துணைக்கு வர இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்த தொடங்கினர். இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 27வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களில் போட்டியை முடித்துள்ளது தென்னாப்பிரிக்கா.

அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும், ஆவேஸ் கான் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இது எளிய இலக்குதான் என்பதால் அடுத்து களம் இறங்கும் இந்தியா மிக குறைந்த ஓவர்களிலேயே இந்த ரன்னை சேஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story