முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர் அஸ்வினும், ஆண்டர்சனும் : ஐசிசி தரவரிசை பட்டியல் விவரம்..

 

By 
aswinn

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கடந்த வாரம் முதலிடத்தை பிடித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியதால் 6 தரவரிசை புள்ளியை இழந்து 859 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் (859 புள்ளிகள்) ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து வகிக்கிறார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் (849 புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (807 புள்ளி) 3 இடம் உயர்ந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 8-வது இடத்தில் தொடருகிறார். இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஜொலித்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 6 இடங்கள் அதிகரித்து 9-வது இடத்தை பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் (919 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2 இடம் முன்னேறி 9-வது இடத்தை அடைந்துள்ளார்.
 

Share this story