ஆசிய விளையாட்டு : துப்பாக்கிச் சுடுதலில் 2 பதக்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை..

By 
rami

* 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டி அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா தனிநபர் பிரிவு மற்றும் குழு பிரிவில் 2 பதக்கங்களை வென்று அசத்தினார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ரமிதா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதேபோல், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்ஷி  அணிவெள்ளி வென்றது.

* ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது. 5.43 நிமிடங்களில் இலக்கை கடந்து இந்தியா பதக்கம் வென்றுள்ளது.

இதேபோல், துடுப்பு படகு போட்டியில் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. 6:50.41 நேரத்தில் இலக்கை கடந்து இந்திய அணி வெண்கலம் வென்றது.

துடுப்பு படகு போட்டியின் லைட் வெயிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங்; வெள்ளி பதக்கம் வென்றது. இந்திய அணி இதுவரை மொத்தம் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது. 

 

Share this story