வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்., வெற்றி: ரன்ஸ் விவரம்..

By 
as5

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
 
ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்,ஆஸ்திரெலியா வென்றது. 2 வது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஷமர் ஜோசப்பின் பந்து வீச்சில் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து வைத்தார்.

இந்த நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது.

எனவே 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்., அணியில் ஜோஸ் இங்கிலிஸ்(65 ரன்கள்), கேம்ரான் கிரீன் (77 ரன்கள்) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (79 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

எனவே, ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Share this story