ஆஸ்திரேலிய அணி அப்செட் ; ஆட்டநாயகன் ஆனார் கிறிஸ் கெயில்
 

By 
Australian team upset; Chris Gayle became the captain

வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி, செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது.

பேட்டிங் :

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 33 ரன்னும், பின்ச் 30 ரன்னும், டர்னர் 24 ரன்னும், வேட் 23 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடி, 38 பந்துகளில் 7 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் பொறுப்புடன் ஆடி 32 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஆட்டநாயகன் :

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகன் விருது கிறிஸ் கெயிலுக்கு வழங்கப்பட்டது.
*

Share this story