இந்திய அணியுடன் நாளை பேட்மிண்டன் போட்டி; இங்கிலாந்து அணி திடீர் விலகல்

Badminton match against India tomorrow; England team abrupt departure

மொத்தம் ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி, வருகிற 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இன்றி நடக்கிறது. 

இந்த ஆண்டின் முதல் சர்வதேச பேட்மிண்டன் தொடரான இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கியான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் களம் காண உள்ளனர். 

உலக பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற இந்திய வீரரான சாய் பிரனீத் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதால், இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதே போட்டியில் பங்கேற்க இருந்த இங்கிலாந்து இரட்டையர் பிரிவு வீரர் சியான் வென்டி மற்றும் அவரது பயிற்சியாளர் நாதன் ராபர்ட்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. 

இதையடுத்து, ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியினரும், இந்திய ஓபனில் இருந்து விலகியிருப்பதாக இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Share this story