பேட்மிண்டன் டுடே : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து; ஆடுகள விவரம்..
 

By 
pvc3

* ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த இயோ ஜியா மின்னுடன் மோதினார். 

இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 24-22, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தோனேசிய வீராங்கனையுடன் பி.வி.சிந்து மோதுகிறார்.

* முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று ஆட்டம் இன்று நடந்தது.

இதில், ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவுடன் மோதினார். இதில் கிவிடோவா 7-6 (16-14), 6-2 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை வென்றார்.

 

Share this story