புரோ கபடி போட்டியில், பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி; தமிழ் தலைவாஸ் இன்று.?

By 
Bangalore team wins 'thrill' in Pro Kabaddi competition; Tamil Talawas today.

பெங்களூரு புல்ஸ் அணி 36-35 என்ற புள்ளிக்கணக்கில், பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 2-வது வெற்றியை அடைந்தது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. 

இதில், நடந்த தபாங் டெல்லி- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 24-24 என்ற புள்ளிக் கணக்கில் சமனில் (டை) முடிந்தது. 

மற்றொரு திரிலிங்கான ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணி 36-35 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து, 2-வது வெற்றியை அடைந்தது. 

அதிகபட்சமாக, பெங்கால் கேப்டன் மனிந்தர் சிங் 17 புள்ளிகளும், பெங்களூரு கேப்டன் பவன் செராவத் 15 புள்ளிகளும் திரட்டினர்.

இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- யு மும்பா (இரவு 7.30 மணி), உ.பி.யோத்தா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
*

Share this story