ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி துபாயிலா?: பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்..

By 
jaisha1

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் குறித்த முதல்கட்ட அட்டவணை சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்த கட்ட அட்டவணை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் அறிவிக்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

ஐபிஎல் போட்டிகள் முதல் கட்டமாக மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில்தான் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த தொடரின் இரண்டாவது பாதி துபாயில் நடைபெற உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த அவர் தேர்தல் முடிவடைந்ததும் இந்தியாவில் தான் இரண்டாம் கட்ட ஐபிஎல் நடத்தப்படும் என்றும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதுமே இந்தியாவில் தான் நடத்தப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து தேர்தலுக்காக ஒரு சிறிய இடைவெளி விட்டு அதன் பின் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share this story