டோனிக்கு முன்னதாகவே, ஜடேஜா களமிறங்க வேண்டும் : மஞ்ச்ரேக்கர் கருத்து

Before Tony, Jadeja should bang Manjrecker comment

ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அங்கம் வகிக்கும் ரவீந்திர ஜடேஜா, கடந்த 7 போட்டிகளில் 6-வது வீரராக களமிறங்கி வருகிறார். அவருக்கு அடுத்து கேப்டன் டோனி களமிறங்கி வருகிறார்.

இதற்கிடையே, நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கேப்டன் டோனி ஜடேஜாவுக்கு முன்னதாக களமிறங்கி, 3 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா எந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மஞ்ச்ரேக்கர் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'ரவீந்திர ஜடேஜா எம்.எஸ்.டோனிக்கு முன்னதாகவே, பேட் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். 

அப்போதுதான் அணி சிறப்பாக செயல்படும். மொயீன் அலி மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தாக்க வீரர்களாக மாறியுள்ளனர். 

எனவே, அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் சிறப்பாக செயல்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Share this story