ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்: சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு..

By 
penst2

2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில்  சிஎஸ்கே அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்றும் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாகவும் சிஎஸ்கே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர் இங்கிலாந்து அணி  ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். சிஎஸ்கே அணி அவரை ஏலம் எடுத்த நிலையில் அவர் ஒரு போட்டியில் கூட காயம் காரணமாக விளையாடவில்லை.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் இந்தியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக சிஎஸ்கே கூறியுள்ளது.

Share this story