ஸ்மிருதி மந்தனாவை ஏலம் எடுத்தது பெங்களூரு அணி; தொகை எவ்வளவு தெரியுமா?

By 
smiriti2

ஐபிஎல் போன்று பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது.

இதற்காக அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் மூலம் எடுக்கப்படுகின்றனர்.

மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று பிற்பகல் ஏலம் தொடங்கியது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.12 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டவர் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள். ஏலப்பட்டியலில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 269 பேர் இந்தியர். 179 வீராங்கனைகள் வெளிநாட்டவர்.

இதில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்பட்ட முன்னணி வீராங்கனைகள் விவரம்:

1. ஸ்மிருதி மந்தனா - ரூ.3.4 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

2. ஹர்மன்பிரீத் கவுர் - ரூ.1.8 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

3. சோபி டிவைன் ரூ.50 லட்சம் - (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

4. ஹெய்லி மேத்யூஸ் - விற்கப்படாதது - 40 லட்சம் அடிப்படை விலை

5. ஆஷ்லீ கார்ட்னர் - ரூ.3.2 கோடி (குஜராத் ஜெயண்ட்ஸ்)

6. சோபி எக்லெஸ்டோன் - ரூ.1.2 கோடி (உ.பி. வாரியர்ஸ்)

7. எல்லிஸ் பெர்ரி - ரூ.1.7 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
 

Share this story