சிஎஸ்கே அணிக்கு புதிய தூதுவராக ஒப்பந்தம் ஆன பாலிவுட் நடிகை..

By 
kai9

இதுவரை ஐபிஎல் தொடரை ஐந்து முறை கைப்பற்றி அதிக கோப்பை வென்ற அணிகளில் ஒன்றாக உள்ளது சிஎஸ்கே. 

இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஐபிஎல் அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தங்களின் புதிய ஸ்பான்சரை அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிகாட் சிஎஸ்கே அணியின் ஸ்பான்சராக இணைந்துள்ளது. இதன் மூலம் கால்பந்து அணிகளுக்கு அடுத்து, முதல் முறையாக ஒரு ஐபிஎல் அணியின் ஸ்பான்சராக இணைந்துள்ளது எதிகாட்.

இந்நிலையில், புதிய தூதுவராக சிஎஸ்கே அணியோடு இணைந்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகையான காத்ரினா கைஃப். ஏற்கனவே காத்ரினா எதிகாட் நிறுவனத்துக்கும் தூதுவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story