'பலே பவுலர்' ஹர்ஷல் பட்டேல் : விக்கெட் 32.. பிராவோ சாதனையை சமன் செய்தார்

'Bowler' Herschelle Patel Wicket 32. Bravo equaled the record

கொல்கத்தா அணியிடம் தோற்றதன் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

ஐபிஎல் தொடரில் நடந்த எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

டாஸ் வென்ற பெங்களூரு அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி கடைசி ஓவரில், வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. 

இதன்மூலம், குவாலிபையர் 2 சுற்றுக்கு கொல்கத்தா அணி முன்னேறியது.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம், நடப்பு தொடரில் அவரது விக்கெட் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. 

இதையடுத்து, ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான சென்னை வீரர் வெய்ன் பிராவோவின் (2013-ம் ஆண்டில் 32 விக்கெட்) சாதனையை சமன் செய்தார்.

Share this story