எறிப்பந்து போட்டி : தேர்வான வீரர்கள் விவரம்..
 

Bowling Tournament Details of Selected Players ..

31-வது தேசிய ஜூனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

31-வது தேசிய ஜூனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில் நடக்கிறது. 

இந்தப்போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்க தலைவர் டி.பாலவிநாயகம் அறிவித்துள்ளார். 

அணி விவரம்  வருமாறு:

ஆண்கள்:- சிவபிரசாத் (கேப்டன்), ஜோதீஸ்வரன், பிரவின், ஹேம்நாத் (சென்னை), வீரராகவன், ஹர்மான்(திருவள்ளூர்), யோகேஷ்வரன், விக்னேஷ், மனோ (திண்டுக்கல்), அருண்குமார், ஜிஸ்னு, கிஷோர் (நீலகிரி), ரமணிதரன் (கரூர்), லோகேஸ்வரன் (திருவண்ணாமலை).

பெண்கள்:- பியூலா ஜாய்ஸ் (கேப்டன்), மாலினி, வர்ஷா (செங்கல்பட்டு), இளவேனில், பத்மினி, தீக்‌ஷிதா (சென்னை), ஜெசிந்த் கிப்டி, ஹர்சிதா, பிரியதர்ஷினி (திருவள்ளூர்), இவாஞ்சல் அலின், சஹானா (திண்டுக்கல்), பூஜா (கரூர்), மணிஸ்ரீ (மதுரை), மோனிஷா (திருவண்ணாமலை.
*

Share this story