குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஓய்வு: காரணம் என்ன.?

By 
kom

இந்திய குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்று வெண்கலம் வென்று சாதனை படைத்தவர் மேரி கோம். அதுமட்டுமல்லாமல் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவர். 

2014 ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றார். இவ்வாறு குத்து சண்டையில் பல சாதனைகளை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மேரி கோம், தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், குத்துச்சண்டை மீதான ஆர்வம் தனக்கு இப்போதும் குறையவில்லை என்றார்.  ஆனால் வயது வரம்பு குறித்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் 40 வயது வரை இருப்பவர்களால் மட்டுமே குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க முடியும். இதனால் ஓய்வை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று தனது ஓய்வு குறித்து மேரி கோம் விளக்கம் அளித்துள்ளார்.

Share this story