குத்துச்சண்டை : 8 தங்கம் உள்பட, 19 பதக்கம் வென்றது இந்தியா

By 
 Boxing India won 19 medals, including 8 gold

ஆசிய ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடக்கிறது. 

இந்த போட்டியின் முடிவில், இந்தியா 8 தங்கப்பதக்கம் பெற்றது. 5 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியது. 

பெண்களில் 10 பேர் பங்கேற்றதில், 6 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கியது. இதில், ஆண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், பிரிட்டனை சேர்ந்த ஆன்டி முர்ரே, கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் மோதினார்.

முதல் செட்டை முர்ரே 6-2 என கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இரண்டாவது செட்டை சிட்சிபாஸ் 7-6 என வென்றார். இதனால், சுதாரித்துக் கொண்ட முர்ரே மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து, ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சிட்சிபாஸ் நான்காவது மற்று,ம் ஐந்தாவது செட்டை 6-3, 6-4 என வென்றார்.

இறுதியில், சிட்சிபாஸ் 2-6, 7-6, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முர்ரேவுக்கு அதிர்ச்சி அளித்தார். 4.30 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் வென்றதன் மூலம் சிட்சிபாஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Share this story