எனது மாநிலம் பற்றி எரிகிறது; தயவு செய்து உதவுங்கள் : மேரி கோம் வேண்டுகோள்

mal09

மணிப்பூரில் மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று நடந்த ஒற்றுமை பேரணியின்போது வன்முறை வெடித்தது. பேரணிக்கு எதிராக சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியபோது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. பதற்றம் அதிகரித்ததையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனையும் முன்னாள் எம்.பி.யுமான மேரி கோம், இந்த கலவரம் தொடர்பாக வேதனையுடன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். எனது மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது, பிரதமர் அவர்களே தயவுசெய்து உதவுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். வன்முறை தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
 

Share this story