கிரிக்கெட் கெத்து : கோலி சாதனையை முறியடிக்கும் முனைப்பில் பட்லர்..

By 
batt4

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 8 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கும் நிலையில் ஜோஸ் பட்லர் 7 சதங்களுடன் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் 20 ஓவர்கள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், அதிக சதம், அதிக சிக்ஸ், பவுண்டரிகள், அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீரர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்வார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தமாக 12 சதங்கள் அடிக்கப்பட்டது.

இதில், குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மன் கில் 3 சதங்கள் விளாசி அதிக சதம், ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 17 போட்டிகளில், 17 இன்னிங்ஸ் விளையாடி 3 சதங்கள் உள்பட 890 ரன்கள் எடுத்து அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார்.

இந்த நிலையில் தான் இந்த 2024 ஆம் ஆண்டுக்கான 17ஆவது சீசனில் இதுவரையில் நடந்த 31 லீக் போட்டிகளின் முடிவுகளின் படி அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் 2 சதங்கள் (100*, 107*) உடன் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா, சுனில் நரைன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஒரு சதம் அடித்துள்ளனர்.

இந்த சீசனில் முதல் முறையாக சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதுவரையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் படி அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 244 போட்டிகளில் 239 இன்னிங்ஸ் விளையாடி 8 சதங்கள் அடித்துள்ளார்.

ஜோஸ் பட்லர் 102 போட்டிகளில், 101 இன்னிங்ஸ்கள் விளையாடி 7 சதங்கள் விளாசியுள்ளார். கிறிஸ் கெயில் 5 சதங்கள், கேஎல் ராகுல், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். சுப்மன் கில், ஏபி டிவிலியர்ஸ், சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா 3 சதங்கள் அடித்துள்ளனர்.

ஹசீம் ஆம்லா, ஷிகர் தவான், குயீண்டன் டி காக், அஜிங்க்யா ரஹானே, பிரெண்டன் மெக்கல்லம், வீரேந்திர சேவாக், ஆடம் கில்கிறிஸ்ட், முரளி விஜய், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர்.

 

Share this story