சச்சின் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியுமா? : ரவி சாஸ்திரி பதில்

virat100

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி சர்வதேச போட்டிகளில் மொத்தம் 75 சதங்கள் (டெஸ்ட் 28 போட்டி , ஒருநாள் போட்டி 46 , டி20 போட்டி 1) அடித்துள்ளார். 

இந்நிலையில் தெண்டுல்கரின் 100 சதம் சாதனையை விராட் கோலி முறியடிப்பது எளிதல்ல என்று முன்னாள் கேப்டனும், இந்திய அணி முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்தவர் ஒருவரே என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். எனவே அதை யாராவது கடக்க முடியும் என்று சொன்னால், அது பெரிய விஷயம். 

விராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள்வரை விளையாட முடியும். அவர் சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை எடுப்பது என்பது கடினமானதே. இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

Share this story