சதம் அடித்து, செம ஸ்டைல் : ரஜினியை ஃபாலோ செய்த வெங்கடேஷ்..
 

By 
Century, camel style Venkatesh follows Rajini ..

விஜய் ஹசாரே தொடர் ஆட்டத்தில், மத்திய பிரதேசம்-சண்டிகார் அணிகள் ராஜ்காட்டில் மோதின. 

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த மத்தியப் பிரதேசம் 9 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தது. 

ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ், 151 ரன்கள் (113 பந்து, 8 பவுண்டரி, 10 சிக்சர்) நொறுக்கினார். நடப்பு தொடரில் அவரது 2-வது சதமாகும்.

3-வது வெற்றி :

பின்னர் ஆடிய சண்டிகார் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 326 ரன்கள் சேர்த்து, 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

அந்த அணியில் கேப்டன் மனன் வோரா (105 ரன்), அங்கித் கவுசிக் (111 ரன்) ஆகியோர் சதம் அடித்தும் பலன் இல்லை. 

பேட்டிங்கில் மிரட்டிய வெங்கடேஷ் பந்து வீசி 2 விக்கெட்டும் வீழ்த்தினார். மத்திய பிரதேச அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.

கவன ஈர்ப்பு :

வெங்கடேஷ் அய்யர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினிகாந்தின் பிறந்தநாளான நேற்று அய்யர் சதத்தை எட்டியதும், இந்த சதத்தை ரஜினிக்கு அர்ப்பணிக்கும் வகையில், அவரது ஸ்டைலை களத்தில் செய்து காண்பித்து கவனத்தை ஈர்த்தார்.
*

Share this story