தமிழக கிரிக்கெட் அணிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
 

Chief Minister Stalin praises the Tamil Nadu cricket team

டெல்லியில் நடந்த சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.
 
3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி, தமிழக அணி சாதனை படைத்தது. தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.

இந்நிலையில், தமிழக கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :

சையது முஸ்தாக் அலி கோப்பையை தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான, துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லோரும், மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
*

Share this story