காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி : பதக்கம் வென்றார் புதுக்கோட்டை வீராங்கனை..

Commonwealth Weightlifting Championship Pudukottai wins medal

உஸ்பெகிஸ்தான் நாட்டில், காமன்வெல்த் போட்டியில் 15-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. 

இதில், இந்திய அணி சார்பில் பளு தூக்கும் போட்டியில் புதுக்கோட்டை அருகே நெம்மேலி பட்டி கிராமத்தை சேர்ந்தவரும், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர், முன்னதாக பளு தூக்குதல் பயிற்சியின்போது சிறுகாயம் காலில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும் போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். இதில் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பளு தூக்கும் பயிற்சியாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில்  அனுராதா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story