இத்தாலியில் மகள் & மனைவியோடு ஸ்வீட் சுற்றுலா - வைரலாகும் கூல் கேப்டன் தோனியின் கிளிக்ஸ்..

By 
itali

கடந்த வாரம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட சாக்ஷி தோனி, நேற்று திங்களன்று தனது கணவர் தோனி மற்றும் மகள் ஜிவாவுடன் தனது ஐரோப்பா பயணத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இத்தாலிய நகரமான பலேர்மோவில் தனது குடும்பத்தாருடன் எடுத்த புகைப்படங்களை சாக்ஷி தோனி பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி, முன்னாள் இந்திய கேப்டன் தனது மகளுடன் ஒரு உணவகத்தில் நேரத்தை செலவிடும் புகைப்படம் அனைவராலும் விரும்பப்பட்டு வருகின்றது.

தனது ஐரோப்பா பயணத்திற்கு முன்பு தோனி புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றை ஏற்றுள்ளார் என்றே கூறவேண்டும். மும்பையின் பாந்த்ராவில் உள்ள பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீமின் ஸ்டுடியோவில் இந்த மாற்றத்திற்காக அவர் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அனந்த் அம்பானியின் திருமணத்தில் தோனி உள்பட பல்வேறு திரை மற்றும் பிற துறை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story